ட்ரெண்டிங்

நாளை மின்விநியோகம் இருக்காது

"சேலத்தில் எந்தெந்த பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது?"- விரிவான தகவல்!

சேலம் மாவட்டம், இடைப்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், இடைப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர், வேலம்மாவலசு, தங்காயூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை 11) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், கூடமலை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, கூடமலை, கண்வாய்காடு, 74 கிருஷ்ணாபுரம், மண்மலை, பாலக்காடு, விஜயபுரம், நரிப்பாடி, நினங்கரை, கடம்பூர், கூலமேடு ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை 11) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்தடைச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெடாவூர் துணை மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக, தெடாவூர், கெங்கவல்லி, ஆணையம்பட்டி, புனல்வாசல், வீரகனூர், கிழக்கு ராஜாபாளையம், நடுவலூர், ஒதியத்தூர், பின்னனூர், லத்துவாடி, கண்வாய்காடு ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை 11) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.