வீரதீர சூரன் திரைப்பட விவகாரம் தொடர்பான வழக்கில் ரூபாய் 7 கோடியை செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓடிடி உரிமம் விற்கப்படும் முன் வீரதீர சூரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை எதிர்த்து B4U நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வீரதீர சூரன் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நேற்று (மார்ச் 26) உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 27) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், வீரதீர சூரன் திரைப்படத்தை வெளியிடும் முன் ரூபாய் 7 கோடியை டெபாசிட் செய்வதுடன், அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
வீரதீர சூரன் இன்று வெளியாகவிருந்த நிலையில் இதுவரை வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மும்பையைச் சேர்ந்த B4U நிறுவனமும் முதலீடு செய்திருந்தது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் ஓடிடி உரிமம் விற்க முடியாததால் தனது முதலீடு தொகையில் 50% நஷ்ட ஈடு வழங்கக்கோரி B4U நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


-SXgDfGgJfO.jpg)