தீபாவளி பண்டிகையை ஒட்டி சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி,பொங்கல் போன்ற தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக நாளை அக்டோபர் 16 முதல் 23ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி மேட்டூர் ஓசூருக்கும் சேலத்தில் இருந்து சென்னை மதுரை சிதம்பரம் காஞ்சிபுரம் மற்றும் பெங்களூருக்கும் இயக்கப்பட உள்ளது,பெங்களூரில் இருந்து சேலம் திருவண்ணாமலை ஓசூர் சென்னை புதுச்சேரி கடலூர் திருச்சி மதுரை தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல்லில் இருந்து சென்னை ஈரோடு பெங்களூர் திருச்சி ஓசூர் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு சாட்டிலைட் பேருந்து நிலையம் மெஜஸ்டிக் என 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது அதேபோல் பயணிகள் தீபாவளி பண்டிகை கொண்டாடி விட்டு சொந்த ஊர் திரும்ப பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்திலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல் அதேபோல் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து இணையதளம் மற்றும் செயலி ( www.tnstc.in ) ( tnstc bus ticket booking)மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதை மேலும் பயணிகள் பேருந்துகளில் பட்டாசுகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் இதனை கண்காணிக்க பேருந்து நிலையங்களில் உள்ள போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு சேலம் கோட்ட போக்குவரத்து நிர்வாக இயக்குனர்,குணசேகரன் உத்தமிட்டுள்ளார்.


-SXgDfGgJfO.jpg)