ட்ரெண்டிங்

சேலம் அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் போராட்டம்: த.வெ.க ஆதரவு !

 

சேலத்தில் செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கி தமிழக வெற்றிக்கழகத்தினர்,செவிலியர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, செவிலியர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முழுவதும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் சேலம் அரசு மருத்துவமனை முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசுக்கு எதிராக செவிலியர்களுடன் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவதாகவும் உறுதியளித்தனர்.

மேலும் இது குறித்து தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோரிடம் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.இதுகுறித்து அறிக்கை வெளியிடவும் தலைமைக்கு தகவல் தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார்.