ட்ரெண்டிங்

குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு! 

சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் இன்றும் (ஜூலை 02), ஜூலை 05 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. இதில் குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஒரு பேனா, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான விண்ணப்பத்துடன் நேரில் வந்து தேர்வை எழுதலாம். முற்றிலும் இலவசம்.