சேலம்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பார்த்திபன் அமைச்சர் பதவி ஏற்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .....
தமிழ்நாடு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது20க்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது அதன் ஒரு பகுதியாக
சேலம்தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் இதனை கட்சி நிர்வாகிகள் சட்டமன்ற அலுவலகம் எதிரே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்
ஒவ்வொரு பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி உங்களால் தான் இந்த வெற்றி
கிடைத்தது உங்களால் தான் அண்ணன் சட்டமன்ற உறுப்பினராகி தற்போது அமைச்சராக பதவி ஏற்றுள்ளார் என்று கூறி ஒவ்வொருவருக்கும்நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



