ட்ரெண்டிங்

உறவினரைக் கொலைச் செய்ய முயன்ற கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் பரபரப்புத் தீர

உறவினரைக் கொலைச் செய்ய முயன்ற கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு! 

சேலம் மாவட்டம், கரியகோயில் அருகே சூலாங்குறிச்சிப் பகுதியில் வசித்து வருபவர் மொட்டையன். இவருடைய அண்ணன் லட்சுமணன், இவர்கள் இருவருக்கும் இடையே பொதுவாக இருந்த 11 ஏக்கர் நிலத்தைப் பிரித்து, கிரையம் செய்து தனித்தனியே விவசாயம் செய்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2020- ஆம் ஆண்டு செப்டம்பர் 6- ஆம் தேதி அன்று லட்சுமணனின் மகன் கனகராஜ், தனது சித்தப்பாவான மொட்டையனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது சித்தப்பாவிடம் பாகப்பிரிவினை குறித்து பிரச்சனை செய்துள்ளார். பின்னர், சித்தப்பாவை அடித்த கனகராஜ், கொலை செய்யவும் முயன்றுள்ளார். 

இது குறித்து மொட்டையனின் குடும்பத்தினர் கரியகோயில் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், கூலித்தொழிலாளியான கனகராஜ் மீது வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு ஆத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் நேற்று (ஆகஸ்ட் 31) நீதிபதி ஆனந்தன், கூலித்தொழிலாளி கனகராஜூக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் கனகராஜை சிறையில் அடைத்தனர்.