ட்ரெண்டிங்

பாரத் அரிசி விற்பனையை தொடங்கியது மத்திய அரசு!

 

வெளிச்சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசின் மலிவு விலையில் விற்பனை செய்யும் பாரத் அரிசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

விளைச்சல் குறைவுக் காரணமாக, அரிசி விலை வெளிச்சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் சாமானிய மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இந்த நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், பாரத் அரிசி விற்பனையை இன்று (பிப்.06) மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, பாரத் அரிசி ஒரு கிலோ ரூபாய் 29- க்கு விற்பனை செய்யப்படுகிறது; ஐந்து மற்றும் பத்து கிலோ பாக்கெட்டுகளில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

 

தேசிய வேளாண் கூட்டுறவுச் சங்கம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கழகங்கள் மூலம் சில்லறை விலையில் மக்களுக்கு பாரத் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் இணையதளங்கள் மூலம் பாரத் அரிசி விற்பனை செய்யப்படவுள்ளது.