ட்ரெண்டிங்

துப்பாக்கி வைத்திருந்தவரை கைது செய்த காவல்துறை!

துப்பாக்கி வைத்திருந்தவரை கைது செய்தது காவல்துறை! 

சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமசாமி (வயது 45). இவர் அரசின் அனுமதி இல்லாமலும், உரிமம் இல்லாமலும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக ஏற்காடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமசாமியின் வீட்டிற்கு அதிரடியாக சென்ற காவல்துறையினர், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனிடையே, காவல்துறையினர் வருவதை அறிந்த ராமசாமி,வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராமசாமியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், ராமசாமி யை காவல்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 30) கைது செய்தனர். 

அதைத் தொடர்ந்து, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் ராமசாமியை காவல்துறையினர் ஆஜர்ப்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில், நீதிமன்றக் காவலில் ராமசாமியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.