ட்ரெண்டிங்

சேலம்-ரியல் எஸ்டேட் முதலீடு 3.50 கோடி மோசடி !!!

சேலம்-ரியல் எஸ்டேட் முதலீடு 3.50 கோடி மோசடி !!!

 

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி 13 பேரிடம் ரூ.3½ கோடி மோசடி

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி 13 பேரிடம் ரூ.3% கோடி மோசடி செய்தது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார்...

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர்,ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகூறினார்.இதனை நண்பர் ஒருவர் மூலம் பெங்களூருவில் ஐ.டி.கம்பெனியில் வேலைசெய்து வரும் பவித்ரா என்பவர் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்போது அவர் தன்னிடம் போதுமான பணம் இல்லை /என்று தெரிவித்துள்ளார்.இதையடுத்து அந்த நபர்,வங்கியில் கடன் வாங்கி தருவதாகவும், அதற்கான தவணை தொகையை நானே செலுத்துகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

பின்னர் அந்த நபர்,வங்கியில் இருந்து ரூ.78 லட்சத்து 81 ஆயி ரத்தை பவித்ராவுக்கு கடனாக வாங்கி கொடுத்தார்.அதன்பிறகு அந்த பணம் முழுவதும் ரியல் எஸ்டேட் நடத்தி வரும் நபரின் வங்கிகணக்கிற்கு பவித்ரா திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.இதனை தொடர்ந்து 2 மாதம் தவணை தொகையை மட்டுமே அந்த நபர் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.அதன்பிறகு பணத்தை செலுத்தவில்லை.மேலும்,இரட்டிப்பு தருவதாக கூறிய பணத்தையும் அவர் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

 

இதேபோல்,சேலம் மற்றும் பெங்களூருவை சேர்ந்த ஏராளமான நபர்களிடமும் அந்த நபர் பணம் இரட்டிப்பு செய்து தருவதாககூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து பாதிக்கப்பட்ட,பவித்ரா மற்றும் சேலத்தை சேர்ந்தவர்கள் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அதில் 13 பேரிடம் ரூ.3 கோடியே 50,லட்சம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.இந்த மோசடி தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.