ட்ரெண்டிங்

4.0 தொழில்நுட்ப மையங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

4.0 தொழில்நுட்ப மையங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 13) காலை 11.30 மணிக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், 45 அரசுத் தொழிற்பயிற்சி மையங்களில் 1559 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு வருடமும் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைவர். புதிய தொழிற்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் கூடுதலாக 4900 தொழிற்பிரிவிற்கான இருக்கைகள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் 10,040 மாணவர்கள் இந்த 4.0 தரத்திலான தொழில்பிரிவுகளில் பயிற்சி பெறுவர். அதுமட்டுமின்றி, பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தோரும் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் இங்கு வழங்கப்படக்கூடிய குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து தற்போதைய தொழில்துறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களைக் கற்று பயனடையலாம் என அரசு தெரிவித்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின் இ.ஆ.ப., வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ் இ.ஆ.ப., டாடா டெக்னாலஜிஸ் தலைவர் (மனிதவளம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்) பவன் பகேரியா மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.