ட்ரெண்டிங்

மூன்று பேரை சரமாரியாக வெட்டிய பா.ஜ.க. பிரமுகர் கைது!

மூன்று பேரை வெட்டிய பா.ஜ.க. நிர்வாகி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

சேலம் மாவட்டம், வீரகனூரில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமாருக்கும், சதீஸ் என்பவருக்கும் தொழில் போட்டி இருந்துள்ளது. இதனை சமாதானம் செய்ய சென்ற பா.ஜ.க. நிர்வாகி சாமுவேல் என்பவர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல், ரவிக்குமார் மற்றும் அவர்களுடன் இருந்த இரண்டு பேரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, வீடு திரும்பிய பா.ஜ.க. நிர்வாகி சாமுவேலை வீரகனூர் காவல்துறையினர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.