ட்ரெண்டிங்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 

சிபிஎஸ்இ 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. 

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.  www.cbse.gov.in என்ற இணையதளத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் அறிந்துக் கொள்ளலாம்; மொத்தம் 22.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 20.95 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்தாண்டில் 0.48% மாணவர்கள் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சென்னை பிராந்தியத்தில் 99.30% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரம் பிராந்தியத்தில் 99.75% மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 

விஜயவாடா பிராந்தியம் 99.60% 2-ஆம் இடம்; கவுகாத்தி 77.94% பெற்று கடைசி இடம் பிடித்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் பிராந்தியத்தில் 99.75% மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.