சேலம் மாநகராட்சியின் அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்டப் பகுதிகளில் தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அப்போது, 6-வது வார்டுக்குட்பட்ட சின்னகொல்லப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தர வேண்டி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் மனுக்களை அளித்தனர்.
அதேபோல், 7-வது வார்டுக்குப்பட்ட உள்ள ஆத்துக்காடு பகுதியில் உள்ள வரட்டாறு தரைபாலத்தினை உயர்த்தி தரவேண்டி சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.



-hcTFAGMRGb.jpg)