ட்ரெண்டிங்

உரிமம் இன்றி செடிகளை உற்பத்தி செய்யும் நாற்றுப்பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை!

உரிமம் இன்றி செடிகளை உற்பத்திச் செய்து விற்பனை செய்யும் நாற்றுப்பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட விதை ஆய்வுத் துணை இயக்குநர் செல்வமணி அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நாற்றுப்பண்ணைகளில் தென்னங்கன்றுகள், காய்கறி நாற்றுகள் உற்பத்திச் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றிற்கு விதைச் சட்டத்தின் படி, உரிமம் பெற வேண்டும் என்பது கட்டாயம் என்பதால், முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உரிமம் பெறும் படி, நாற்றுப்பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஒருவேளை தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.