சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பா.ம.க.வைச் சேர்ந்த மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் தனது தொகுதி சார்ந்தக் கோரிக்கை மனுவை வழங்கினார்.
அந்த கோரிக்கை மனுவில், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் வாழும் 10,000- க்கும் மேற்பட்ட மக்கள், பட்டா இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேச்சேரியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகாப் பிரிக்க வேண்டும். மேச்சேரி காவல் நிலையத்தில் நிர்வாக வசதிக்காக காமனேரியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், பள்ளிப்பட்டி, மல்லிகுந்தம், கூனாண்டியூர், கோனூர், ஊராட்சிகளை ஒருங்கிணைந்து, தனிக்குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.



-SXgDfGgJfO.jpg)