சேலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !
சேலம்:
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கண்டித்து, சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் மாநகரில் கோட்டை ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் திரளாகப் பங்கேற்று, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து வரும் நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மட்டும் தங்கத்திற்கு நிகராக உயர்ந்து வருவதாகக் குற்றம்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.



-hcTFAGMRGb.jpg)