ட்ரெண்டிங்

ஏற்காட்டில் ரோப் கார் வசதி- சாத்தியக்கூறு ஆய்வு!

 

தமிழக்தில் 22 இடங்களில்,ரோப் கார் வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணி நடந்து வருகிறது.

 

நாடு முழுவதும் மலை பிரதேசங்கள், மலை கோவில்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்தை எளிதாக்குவதற்கு,ரோப் கார் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் தனிப்பிரிவுத் துவங்கப்பட்டு உள்ளது.

 

சென்னை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, நாமக்கல், சேலம், திருச்சி, தென்காசி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரோப் கார் வசதியை ஏற்படுத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் துவங்கியுள்ளது. சாத்தியமுள்ள இடங்களில் பட்டியல் இரண்டு மாதங்களில் இறுதிச் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படவுள்ளது.

 

அதைத் தொடர்ந்து, திட்ட மதிப்பீடு தயாரிப்புப் பணிகள் துவங்கும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 3 கிலோ மீட்டருக்கும், திருச்செங்கோடு மலையில் 2 கிலோ மீட்டருக்கும் ரோப் கார் வசதி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.