ட்ரெண்டிங்

மேட்டூரில் நீர்மட்டம் உயர்வு காவிரி டெல்டாவுக்கு 7,000 கனஅடி திறப்பு !

 

மேட்டூர் அணையில் தொடர்ந்து உயரும் நீர்மட்டம்

நீர்வரத்து அதிகரிப்பால் 91.94 அடியாக உயர்வு – காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 7,000 கனஅடி நீர் திறப்பு

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று மேட்டூர் அணையை திறந்து வைத்த நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 9,721 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 10,288 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.94 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையில் 54.89 டி.எம்.சி. அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.

இதற்கிடையே, காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை விட அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது