ட்ரெண்டிங்

சேலத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! 

மக்களவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை 4 நாட்களுக்கு மூட சேலம் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி, இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் ஏப்ரல் 17- ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணி முதல் ஏப்ரல் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 04- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நாள் முழுவதும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மற்றும் எப்.எல்.1 முதல் எப்.எல்.11 வரை அனைத்தும் மூடப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட நாட்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

மேலும், மேற்கண்ட நாட்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.