தமிழ்நாடு திருநாளை முன்னிட்டு, தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும் போது, உள்ளத்தில் மகிழ்ச்சி, ஆற்றல் ஏற்படுகிறது. கடல் கண்டு, மலை கண்டு பெயர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. களம் கண்டு, கலை கண்டு, கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு உரம் கொண்டு உயிர் வாழ்ந்த தமிழ்நாடு வாழ்க எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஜூலை 18- ஆம் தேதி நாளை நினைவுக்கூர்ந்து முதலமைச்சர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


-SXgDfGgJfO.jpg)