இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ளது இந்தியன் 2 திரைப்படம். ரெட் ஜெயின்ட்ஸ் மூவிஸ், லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம், நாளை (ஜூலை 12) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்கள் சித்தார்த் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியன் 2 படத்தின் முதல் காட்சி 09.00 மணிக்கு தொடங்கி ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2 திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிஸ் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


-SXgDfGgJfO.jpg)