ட்ரெண்டிங்

வரத்து அதிகரித்ததால் முருங்கைகாய் விலை கடும் சரிவு!

 

சேலம் மாவட்டத்தில் முருங்கைமரம் அதிகளவில் உள்ளது. தற்போது முருங்கைகாய் விளைச்சல் எதிர்பார்த்ததை விட அதிகளவு வந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த சூழலில், சேலம் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளில் முருங்கைகாய் வரத்து அதிகரித்துள்ளது. 

 

கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோ முருங்கைகாய் ரூபாய் 100 முதல் ரூபாய் 120 வரை விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது முருங்கைகாய் ஒரு கிலோ ரூபாய் 40 முதல் ரூபாய் 30 வரை ரகத்திற்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முருங்கைகாய் விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

 

இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், "முருங்கைகாய் சீசன் தற்போது தொடங்கியுள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் முருங்கைகாய் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், அதன் விலையும் சரியக்கூடும்" என்றனர். 

 

இதனிடையே, விலை குறைவு காரணமாக, இல்லத்தரசிகள் சமையலில் முருங்கையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். முருங்கைகாய் மருத்துவ குணம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.