ட்ரெண்டிங்

மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஸ்கேட்டிங், சைக்கிளிங் பேரணி!

தேசிய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் ஸ்கேட்டிங்கில் தேசிய கொடியை ஏந்தியவாறு தனியார் பள்ளியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

வரும் ஆகஸ்ட் 29- ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுவதையொட்டி, போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண் வன்கொடுமைத் தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில், சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள தனியார் பள்ளி சார்பில் பேரணி நடைபெற்றது. 

இதில், 200- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேசிய கொடியை ஏந்தியவாறு, ஸ்கேட்டிங், சைக்கிளிங் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டனர். ஆத்தூர் காந்தி சிலை பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி, அம்மம்பாளையம் தனியார் பள்ளி வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. 

இந்த பேரணியில் பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளியின் நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பேரணியில் கலந்து கொண்டனர்.