ட்ரெண்டிங்

ஓமலூர் சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்துக் குறைந்தது!

சேலம் மாவட்டம், ஓமலூர் சந்தைக்கு வரத்துக் குறைவுக் காரணமாக, பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால், பெரிய வெங்காயம் சாகுபடி குறைந்துள்ளது. விளைச்சல் பாதிப்பு, போக்குவரத்து இடையூறு  உள்ளிட்டக் காரணங்களாலும் ஓமலூர் சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்துக் குறைந்துள்ளது. 

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வந்த சூழலில், தற்போது ரூபாய் 35 முதல் 40 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வுக் காரணமாக பொதுமக்கள் பெரிய வெங்காயம் வாங்குவதைக் குறைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.