சேலம் மாநகரில் குமாரசாமிப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அருள்மிகு எல்லைபிடாரி அம்மன் திருக்கோயிலில் திருவிழா வரும் மார்ச் 18- ஆம் தேதி கம்பம் நடுதல், பூச்சாட்டுதலுடன் தொடங்கவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மாவிளக்கு, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி வரும் மார்ச் 25- ஆம் தேதி நடக்கிறது.
மார்ச் 26- ஆம் தேதி அம்மன் ஊர்வலம், அலகு குத்துதல், பொங்கல் வைபோகம், இன்னிசை நிகழ்ச்சியும், மார்ச் 27- ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணமும், அக்னி குண்டம் இறங்குதலும், மார்ச் 28- ஆம் தேதி பால்குடம் ஊர்வலம், அம்மனுக்கு தங்கக்கவசமும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜையும், மார்ச் 29- ஆம் தேதி சத்தாப்பரணத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
அன்றைய தினம் 1,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மார்ச் 30- ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், மார்ச் 31- ஆம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.


-SXgDfGgJfO.jpg)