ட்ரெண்டிங்

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் -அமைச்சர் பார்த்திபன்

 

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உணவு சாப்பிட்டு உணவு தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்,விஜய் தமிழன் பார்த்திபன் கூறுகையில் :-

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.அது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் எனவும் போக்குவரத்து துறையில் என்னென்ன குறைகள் உள்ளது.அனைத்தையும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அதை தீர்த்து வைப்போம்..ஒவ்வொரு குறைகளாக கேட்டறிந்து அதை தொகுத்து முதல்வரிடம் கொடுத்து அதை நிறைவேற்றுவோம் அதை நிச்சயம் செய்து கொடுப்போம். என்றார்.

அரசு பேருந்துகளில் உள்ள பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, ஆலோசனை நடத்தி தமிழக முதல்வர் கவனத்திற்கு அனைத்து குறைகளும் கொண்டு செல்லப்பட்டு அனைத்திற்கும் தீர்வு காணப்படும். எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி இருக்கும் எனவும் கடந்த கால ஆட்சி போல சூழல் விளக்கு போட்டு சுற்றும் வேலையில்லை அடிமையாக இருந்த மக்கள் சுதந்திரமாக தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் உள்ளார்கள்.என போக்குவரத்து துறை,அமைச்சர் பார்த்திபன்,தெரிவித்தார்.