ட்ரெண்டிங்

காதலர் தினத்தையொட்டி, சூடுபிடித்துள்ள ரோஜா பூக்கள் விற்பனை!

 

காதலர் தினத்தையொட்டி, சேலம் பூ மார்க்கெட்டுகளில் ரோஜா பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

 

உலக காதலர் தினத்தையொட்டி, ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு என பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள், சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டை விட, ரோஜா பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால், விலை சற்று அதிகரித்துக் காணப்படுகிறது.

 

கடந்த ஆண்டு 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ரோஜா, இந்தாண்டு 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. 20 ரோஜா பூக்கள் கொண்ட மலர் கொத்து 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

விலை அதிகமாக இருந்தாலும் சிவப்பு ரோஜா மலர்களை காதலர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.