ட்ரெண்டிங்

சென்னை to டெல்லி.....- யார் இந்த சீதாராம் யெச்சூரி?- விரிவான தகவல்! 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (வயது 72) இன்று (செப்.12) டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் 20 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானார். 

சீதாராம் யெச்சூரி குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சீதாராம் யெச்சூரி கடந்த 1952- ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஆந்திரா, டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்து, டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பைப் பயின்றார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முடித்த யெச்சூரி அவசர நிலை பிரகடனத்தின் போது கைதானார். 

1974- ல் மாணவர் கூட்டமைப்பில் இணைந்த யெச்சூரி கடந்த 1975- ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். மார்க்சிஸ்ட் கட்சியில் மத்திய குழு உறுப்பினர், பொலிட் ப்யூரோ என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2005- ஆம் ஆண்டு முதல் 2017- ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக சீதாராம் யெச்சூரி இருந்துள்ளார். 

மாநிலங்களவையில் பல்வேறு முக்கிய தலைப்புகளில் பேசி கவனத்தை ஈர்த்தவர் சீதாராம் யெச்சூரி. கடந்த 2015- ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம யெச்சூரி தேர்வுச் செய்யப்பட்டார்.