ட்ரெண்டிங்

தொண்டர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டதாக புகார்! 

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மலையரசன், சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த புளியங்குறிச்சி கிராமத்தில் வாக்குச் சேகரிக்க சென்ற போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வி.சி.க.வின் துண்டை தனது தலையில் கட்டிக் கொண்டு தி.மு.க. வேட்பாளர் பறை இசைத்து ஆட்டம் போட அந்த இடமே கொண்டாட்டக்களமானது.

சேலம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து கூட்டணி கட்சித் தொண்டர்கள் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட அவர்களின் இருசக்கர வாகனங்களுக்கு செம்மாண்டப்பட்டியில் உள்ள பெட்ரோல் டோக்கன் அடிப்படையில் 200 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகப் புகார் எழுந்திருக்கும் சூழலில் இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.