ட்ரெண்டிங்

சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்? 

சேலம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் விக்னேஷ் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளராக விக்னேஷ் உள்ளார். 

அதேபோல், சேலம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் டி.எம்.செல்வகணபதி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க.வின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக டி.எம்.செல்வகணபதி உள்ளார். 

25 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். கடந்த 1999- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டி.எம்.செல்வகணபதி.