தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கும் தேதிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். அதன்படி, 4 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 20-ஆம் தேதி வெளியாகும் என்றும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இந்த ஆண்டில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், அதனை செயல்படுத்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என கூறப்பட்டது.
இதனுடன், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களையும் அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிட்டார்.


