ட்ரெண்டிங்

கைது செய்யப்பட்ட திருநங்கையை விடுவிக்க கோரி போராட்டம்

 

சேலம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை இரவு கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் வெளிநாட்டிற்கு வேலை செய்யும் ஏஜெண்டை பார்க்க வந்துள்ளார். கையில் 75 ஆயிரம் பணம் வைத்திருந்ததை கவனித்த பிரியங்கா என்கின்ற திருநங்கை சிவக்குமாருக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கூட்டி சென்றுள்ளார். அவரின் பேச்சுக்கு மயங்கிய சிவக்குமார் அவருடன் சென்று 75 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு திருநங்கைகள் ஒன்று கூடி சிவகுமாரை மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன சிவக்குமார் புதிய பேருந்து நிலையம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்ற பள்ளப்பட்டி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பிரியங்காவை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 68 ஆயிரத்தை மீட்டனர். மீதி 7000 ரூபாய் செலவழிந்து விட்டதாக பிரியங்கா தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருநங்கைகள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கைது செய்யப்பட்ட திருநங்கை பிரியங்காவை விடுவிக்க கோரி தீ குளிக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதில் திருநங்கைகள் கலைந்து சென்றனர்.