மயானத்திற்கு சுற்றுச்சுவர்- பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.!
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 3- வது வார்டில் உள்ள ரெட்டியூர் மயானத்திற்கு அண்மையில் சென்ற அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பா.ம.க. சேலம் மாவட்டச் செயலாளருமான அருள், சிதலமடைந்த நிலையில் உள்ள சுற்றுச்சுவரை ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் இடித்துக் கொடுக்கும் படி, அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, மயானத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் கேட் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள், எம்.எல்.ஏ. அருளிடம் கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சத்தை ஒதுக்கீடு செய்த எம்.எல்.ஏ. அருள், மயானத்திற்கு இன்று (ஜன.26) நேரில் சென்று சுற்றுச்சுவர் மற்றும் கேட் அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜை செய்துத் தொடங்கி வைத்தார். அத்துடன், பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

-OEsqBHkqDi.jpg )
