ட்ரெண்டிங்

கேரள முதல்-மந்திரியகிறார் வி.டி.சதீசன்.. நாளை பிரமாண்ட பதவியேற்பு.

 

 

கேரள அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசன் புதிய முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார்.

 

திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதால், கேரளா முழுவதும் கட்சித் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதவியேற்பு விழாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.