ஆழ்வார்பேட்டை இல்லத்தில் அரசியல் நாகரிக சந்திப்பு
தமிழக முதலவராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதல்வர் விஜயை, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அன்புடன் வரவேற்றார். தொடர்ந்து, ஸ்டாலினுக்கு விஜய் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். பதிலுக்கு ஸ்டாலினும் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு புத்தகம் வழங்கினார்.
சந்திப்பின் போது இரு தரப்பினரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பு குறித்து ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்ற விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் மரியாதை மற்றும் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்திய இந்த சந்திப்பு, பொதுமக்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

-mLnG6wiasn.jpeg )

