ட்ரெண்டிங்

மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க..! முதல் நாளே முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் பதில

 

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இன்று தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். பதவியேற்ற உடனேயே பல முக்கிய அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததுடன், நிதிநிலை குறித்த கருத்துகளுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தலைவர் விஜய்க்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். பதவியேற்றதும் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. மக்களுக்குக் கொடுக்க மனசும் ஆட்சித் திறமையும் வேண்டும். கோவிட், வெள்ளம் உள்ளிட்ட பல சவால்களையும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையையும் சமாளித்து எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தினோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், “ரூ.10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு சென்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஆனால் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது. நிதிநிலை குறித்து கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாக விளக்கியிருந்தோம். அதற்குப் பிறகுதான் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன” என தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க. ஆட்சியில் தற்போது தான் அடியெடுத்து வைக்கிறீர்கள். விரைவில் நிர்வாகத்தின் நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த அறிக்கை தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.