ட்ரெண்டிங்

நேரில் பங்கேற்க தடை விதிக்கவில்லை- தமிழக அரசு விளக்கம்! 

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நேரில் பங்கேற்கத் தடை விதிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

அதில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நேரில் பங்கேற்கத் தடை என அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை; நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ, காணொளி மூலமோ பங்கேற்று வலுவான வாதங்களை முன் வைக்கின்றனர். டெல்லியில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று தமிழகத்திற்கு நீர் பங்கினைப் பெற வாதங்கள் வைக்கப்படுகின்றன. 

கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என உண்மைக்கு புறம்பான செய்து வெளியீடப்பட்டுள்ளது. அதிகாரிகள் நேரில் கலந்து கொள்ள தேவையான அனுமதியை அரசு உடனுக்குடன் அளிக்கிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.