சேலம் மாநகரில் ராமதாஸ் தரப்பில் நடத்தப்படும் பொதுக்குழு பாமகவின் பொதுக்குழு அல்ல; பாமகவின் அடையாளத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறி பாமக தலைவர் அன்புமணி தரப்பினர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார்.,
பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் தான் ஆனால் கட்சியில் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை
பாமக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகின்ற 29ஆம் தேதி சேலம் மாநகரில் நடைபெறுவதாக ராமதாஸ் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் படி பொதுக்குழு உள்ளிட்ட எந்த வித கூட்டத்தையும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவர் தலைமையில் தான் நடத்த வேண்டும்; பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை கட்சியின் சார்பாக அனுமதியும் பாதுகாப்பும் எதுவும் கோரப்படவில்லை எனவே கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி வேறு யாரேனும் அனுமதி கேட்டால் தர வேண்டாம் என்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கடிதம் வழங்கியுள்ளனர் மேலும் பாமக கட்சியின் கொடியையும் அடையாளத்தையும் தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கை விடுத்துள்ளனர். பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தான் ஆனால் அவரால் பொதுக்குழுவை கூட்ட முடியாது அதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் தெரிவித்தனர். உயர் நீதிமன்றத்திலும் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் ஒரு தரப்பினர் தொடரப்பட்ட வழக்கில் பாமகவின் தலைவர் அன்புமணி தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுக்குழுவை கூட்டவும் அதன் தலைமை ஏற்கவும் அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தனர். சேலத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள் மட்டும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கொளத்தூர் மணி ஆகிய இருவருக்கும் மனநல பாதிக்கப்பட்டுவிட்டது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு குறித்த ஆலோசிக்கலாம் பங்கேற்கலாம் தவிர கூட்டுவதற்கு அனுமதி இல்லை. நீக்குவதற்கு தலைவருக்கு மட்டுமே அனுமதி உள்ளது விதிகளின்படி நிறுவன தலைவருக்கு அனுமதி இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கூட்டணி அறிவிப்பதற்கு ராமதாசுக்கு அனுமதி அதிகாரம் கிடையாது. அவ்வாறு அறிவித்தாலும் செல்லாது. தனிப்பட்ட முறையில் சொல்லலாமே தவிர அவருக்கு அதிகாரம் கிடையாது.
திங்கட்கிழமை கூட்டும் கூட்டம் செல்லாது, கொடியை சின்னத்தையோ பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்...


