ட்ரெண்டிங்

ஒரே மேடையில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள்! 

சேலம் மாவட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று (மார்ச் 19) மதியம் 01.00 மணியளவில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா கூட்டணி குறித்து அடுக்கடுக்கான விமர்சனங்களை முன் வைத்தார். 

பொதுக்கூட்டத்தில் காமராஜர் மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., 
நடிகர் சரத்குமார், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் கே.பி.ராமலிங்கம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பா.ஜ.க.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் மாநில தலைவர் கோபிநாத், பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

சேலம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளிக்கிண்ணம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் சேலம், நாமக்கல், கரூரில் இருந்து ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர். 

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை ஒவ்வொருவராக சந்தித்துப் பேசிய பிரதமர், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.