ட்ரெண்டிங்

புரட்டாசி சனிக்கிழமை, உழவர் சந்தைகளில் களைகட்டிய காய்கறிகள், பழங்கள் விற்பனை!

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்களின் விற்பனை களைகட்டியது.

 

புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால், பெரும்பாலானோர் அசைவ உணவுகளைத் தவிர்த்து, சைவ உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் நடப்பு மாதத்தில் காய்கறிகளின் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அதேபோல், நேற்று (செப்.30) புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, மேட்டூர், ஆத்தூர், ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, மேட்டூர் ஆகிய 11 உழவர் சந்தைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

 

நேற்று ஒரேநாளில் 217 டன் காய்கறிகள், 4 டன் பழங்கள் மற்றும் பூக்கள் என மொத்தம் 83.92 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.