ட்ரெண்டிங்

சேலத்தில் பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் !

 

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து 250 திறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் பேருந்து சேவை குறித்தான செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். 

அதன்படி கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டை முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 29 வரை கீழ்காணும் பேருந்து நிலையங்களில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப 250 சிறப்பு பேருந்துகள் மாற்று பேருந்துகள் தடம் நீட்டிப்பு மற்றும் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 

சேலம் புறநகர் பஸ் நிலையம் பெங்களூரு,சென்னை,ஓசூர்,கோவை திருப்பூர்,திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம்,ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பதிவு மையம் வழியாகவும் இணையதளம் வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் இருந்து சேலம்,நாமக்கல் ஓசூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, பாலக்கோடு,பென்னாகரம்,ஊத்தங்கரை,அரூர் மற்றும் மேட்டூர்,சேலத்தில் இருந்து சென்னை,மதுரை,சிதம்பரம்,காஞ்சிபுரம் பெங்களூரு,ஓசூர், திருவண்ணாமலை,திருவாரூர்,திருப்பதி,பெங்களூரில் இருந்து சேலம்,திருவண்ணாமலை ஈரோடு,மற்றும் காஞ்சிபுரம்,ஓசூரில் இருந்து சேலம்,சென்னை,புதுச்சேரி கடலூர்,திருச்சி,மதுரை,கோவை மற்றும் திருப்பூர்,நாமக்கல்,ஆத்தூர் செந்தாரப்பட்டி,ராசிபுரத்தில் இருந்து சென்னை,திருவண்ணாமலை இருந்து பெங்களூரு,ஈரோட்டில் இருந்து பெங்களூரு,திருச்சியில் இருந்து ஓசூர் சேலம்,கோவை,என தினசரி 4 நடைகள் ஆகும் எனவே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அனைவரும் பயன நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும்படி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.