ஆன்மிகம்

10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோட்டை மாரியம்மன் கோயில் தங்கத்தேர் உலா!

 

சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலின் தங்கத்தேர் உலா சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.


சேலம் மாநகரில் அமைந்துள்ள கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் ரூபாய் 1,98,59,075 மதிப்பீட்டில் தங்க ரதம் ஒன்று புதியதாக செய்யப்பட்டு, கடந்த 2010- ஆம் ஆண்டு ஜூலை 25- ஆம் தேதி அன்று வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து தங்க ரத தேரோட்டம் பக்தர்களின் முன்பதிவின் அடிப்படையில் நடைபெற்று வந்த நிலையில், திருக்கோயிலில் புனரமைப்பு வேலைகள் தொடங்கப்பட்டதால் தங்கத்தேர் புறப்பாடானது கடந்த 2014- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24- ஆம் தேதி அன்று நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது திருக்கோயிலின் கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிவுற்று இன்று (அக்.27) காலை 07.40 மணிக்கு மேல் 09.30 மணிக்குள் திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்க தேர் உலா இன்று (அக்.27) அன்று மாலை 06.00 மணிக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.