ட்ரெண்டிங்

மைசூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் | டிசம்பர் 23 முதல் 29 வரை இயக்கம் !

 

செய்தி :

பயணிகள் வசதிக்காக கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மைசூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயிலை தென் ரயில்வே இயக்குகிறது. இந்த ரயில் டிசம்பர் 23, 27 ஆகிய தேதிகளில் மைசூருவிலிருந்தும், 24, 28 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்தும் புறப்படும்.

இந்த சிறப்பு ரயிலில் AC 2-டையர், AC 3-டையர், ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு மற்றும் லகேஜ்-கம்-பிரேக் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

ரயில் எண் 06283 (மைசூரு – தூத்துக்குடி) மைசூருவில் மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில், மண்டியா, மடூர், சென்னபட்டணா, ராமநகரம், பெங்களூரு (KSR & கான்டோன்மெண்ட்), ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

அதேபோல் மறு மார்க்கத்தில் ரயில் எண் 06284 (தூத்துக்குடி – மைசூரு) தூத்துக்குடியில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு (கான்டோன்மெண்ட் & KSR), ராமநகரம், சென்னபட்டணா, மடூர், மண்டியா வழியாக மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூரு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் சேவை, கர்நாடகா – தென் தமிழக பகுதிகளுக்கு இடையே பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவே பொதுமக்கள் ரயில் பயணிகள் இந்த விழாக்கால ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.