விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித் மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக தங்கலான் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தங்கலான் படத்தின் தெலுங்கு மொழி ட்ரெய்லரை நடிகர் விக்ரமும், தமிழ் மொழி ட்ரெய்லரை பா.ரஞ்சித்தும் வெளியிட்டனர்.
டரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே 1.50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளதால், படக்குழு உற்சாகமடைந்துள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


