ட்ரெண்டிங்

மதுபானங்களை விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது!

மதுபானங்களை விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது! 

சேலத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களைப் பெற்று, அதை கள்ளத்தனமாக விற்பனை செய்த பெண் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம்- ஓமலூர் பிரதான சாலை அருகே உள்ள மூலப்பாதைப் பகுதியில் கொங்கணாபுரம் காவல்துறையினர் அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, சாலையில் ஒருவர் மதுபான பாட்டில்களை விற்பனை செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழனிசாமி (வயது 57) என்பதும், கோரணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, பழனிசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். 

அதேபோல், தம்மம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையிலான காவல்துறையினர், ரோந்து சென்றனர். அப்போது, பேருந்து நிறுத்தம் அருகே விஜயக்குமார் (வயது 39) என்பவர் மதுப்பாட்டில்களை விற்பனை செய்துக் கொண்டிருந்தார். அவரை கையும் களவுமாக காவல்துறையினர் கைது செய்தனர். 

தலைவாசல் அடுத்த தேவியாக்குறிச்சி மேம்பாலம் அருகே மதுபானங்களை விற்பனை மாலதி மற்றும் வரகூர் பகுதியில் மதுபானங்களை விற்பனைச் செய்த சக்திவேல் ஆகியோரை தலைவாசல் காவல் நிலைய ஆய்வாளர் அழகுராணி கைது செய்துள்ளார்.