பெங்களூரு எஸ்.எம்.வி.டி (SMVT) – திருவனந்தபுரம் நார்த் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில், பெங்களூருவிலிருந்து 20.12.2025 அன்று மற்றும் திருவனந்தபுரம் நார்த்திலிருந்து 21.12.2025 அன்று இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டாம் வகுப்பு, ஏசி மூன்றாம் வகுப்பு, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய லக்கேஜ்–பிரேக் வான் ஆகிய பெட்டிகள் இடம்பெற்றுள்ளன.
பெங்களூரு → திருவனந்தபுரம் நார்த் (20.12.2025): பெங்களூரு கேன்டோன்மெண்ட் மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு,சேலம் மாலை 7.40 மணி,ஈரோடு இரவு 8.45 மணி,பாலக்காடு இரவு 11.17 மணி,எர்ணாகுளம் டவுன் அதிகாலை 1.50 மணி,கோட்டயம் அதிகாலை 3.07 மணி,கொல்லம் காலை 5.00 மணி வழியாக சென்று,திருவனந்தபுரம் நார்த் காலை 6.30 மணிக்கு சென்றடையும்.
திருவனந்தபுரம் நார்த் → பெங்களூரு (21.12.2025): திருவனந்தபுரம் நார்த் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு,கொல்லம் காலை 10.30 மணி, கோட்டயம் மதியம் 12.24 மணி,எர்ணாகுளம் டவுன் மதியம் 1.35 மணி,பாலக்காடு மாலை 4.42 மணி, ஈரோடு இரவு 8.20 மணி,சேலம் இரவு 9.20 மணி வழியாக சென்று,பெங்களூரு கேன்டோன்மெண்ட் 22.12.2025 அன்று காலை 3.30 மணிக்கு சென்றடையும்.
பண்டிகை மற்றும் பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


-SXgDfGgJfO.jpg)