ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் 26.68 லட்சம் வாக்காளர்கள்; சிறப்பு தீவிர திருத்தத்தில் 3.62 லட்சம் பேர் நீக்கம

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு உள்ளிட்ட 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டார்.

இதன்படி, சேலம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் 13,30,117 ஆண் வாக்காளர்கள், 13,37,688 பெண் வாக்காளர்கள், 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,68,108 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தக் கணக்கெடுப்பு பணிகளின் போது,
இறந்தவர்கள் – 1,00,974 பேர்,
முகவரி மாற்றம் செய்தவர்கள் மற்றும் குடியிருப்பில் இல்லாதவர்கள் – 2,41,284 பேர்,
இரட்டை பதிவுகள் – 20,171 பேர்
என மொத்தம் 3,62,429 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் 6, 7 மற்றும் 8 தொடர்பான கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.01.2026 வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர், அந்தந்த வாக்குச் சாவடிகள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

மேலும், Voters.ec.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.