தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகள் உப யோகத்திற்கு தேவையான அளவில் எலுமிச்சை அப ரிதமான விளைச்சலை தந்துள்ளது.இதனால் டன் கணக்கில் விற்பனைக்கு வரும் எலுமிச்சை விற்பனை,குளிர்காலம் என்பதால் மந்தமாகி உள்ளதாக வியாபாரிகள் தகவல்..
எலுமிச்சை என்பது ஒரு வெப்பமண்டல பயிர்.அதிக குளிர் இருந்தால் அதன் வளர்ச்சி மந்தமாகிவிடும். சமவெளியிலும்,மலைப்பகுதிகளிலும் செழித்து வளரும் தன்மை கொண்டது எலுமிச்சை இந்த வகையில் தமிழகத்தில் கீழ்பனிமலை,சிறுமலை,சேர்வராயன்மலை,பச்சைமலை,கொல்லிமலை,பகுதிகளில் எலுமிச்சை மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது.
சேலம்.திருச்சி,மதுரை,வேலூர் நெல்லை, கோவை மாவட் டங்களில் இறவை பாசனத் தில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.இப்படி மாநிலம் முழுவதும் சாகுபடி செய்யப்படும் எலுமிச்சை,பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இதே போல் மொத்தமாகவும் வியாபாரிகள் எலுமிச்சையை வாங்கி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தவகையில் சேலம் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு தினசரிடன் கணக்கில் எலுமிச்சை விற்பனைக்கு குவிக்கப்படுகிறது.ஆனால் அமோக விளைச்சல் கண்டுள்ள எலுமிச்சையின் விற்பனை,தற்போது குளிர்காலம் என்பதால் வெகுவாக குறைந்துள்ளது.அதேநேரத்தில் அடுத்த 5ஆண்டுகள் உபயோகத்திற்கு தேவையான அளவில் எலுமிச்சை அபரிதமான விளைச்சலை தந்துள்ளது என்றும் வியாபாரிகள் தெரி வித்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் சரக எலுமிச்சை வியாபாரிகள் கூறியதாவது ;
எலுமிச்சை யின் பயன்பாடு என்பது கோடைகாலத்தில் மிகவும் அதிகமாகவும், குளிர்காலத்தில் குறைவாகவும் இருப்பது வழக்கமான ஒன்று தான் ஆனால் சமீப ஆண்டுகளாக விவசாயிகளிடம் எலுமிச்சை சாகுபடிக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.வறட்சியை தாங்கி வளரும் திறன்,அதிகலாபம்.பல்வேறு நிலைகளில் பயன்பாடு, நிரந்தர வருமானம் என்ற அடிப்படையில் விவசாயிகள்,அதிகளவில் எலுமிச்சை பயிரிட்டு வருகின்றனர். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை எலுமிச்சை நடவு செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் பலர் ஊடுபயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக நடப்பாண்டில் மாநிலம் முழுவதும் எலுமிச்சை சாகுபடி அமோகமாக நடந்துள்ளது. வேளாண்துறை கணக்கீடுகளின் படி அடுத்த 5 ஆண் டுகள் உபயோகத்திற்கு தேவையான அளவில் எலுமிச்சை சாகுபடி அபரிதமான விளைச்சலை தந்துள்ளது.தற்போது பெரும்பாலான பகுதிகளில் கிலோ ரூ.20 என எலுமிச்சை விற்பனை நடத்துவருவதாக வியாபாரிகள் கூறினர்.


