ட்ரெண்டிங்

மக்களவையில் தொடர் அமளி- சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் சஸ்பெண்ட்!

 

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கக் கோரி, மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிட்ஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

அதன்படி, கனிமொழி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பி.ஆர்.நடராஜன், சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன், டீன் குரியகோஸ், பென்னி பெஹனன் உள்ளிட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, நாடாளுமன்ற மக்களவை நாளை (டிச.14) காலை 11.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.